கிசு கிசுதமிழ் சினிமா

“மாமன்னன்”வடிவேலு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் இவரா..? வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட வைகைப்புயல்.!!

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாமன்னன்.  இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. வசூல் ரீதியாகவும் படம் 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ்.

இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.

அவரிடம் திரை நுணுக்கங்களை கற்றுத்தெறிந்து திரைத்துறையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிரபல வார இதழ் பத்திரிகையான “மறக்க நினைக்கிறேன்” என்ற தொடரை எழுதியுள்ளார். தமிழில் பெரியேறும் பெருமாள் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்படைத்தார். திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த மாரி செல்வராஜ் கிராமங்கள் சார்ந்த படங்களை இயக்குவதிலேயே ஆர்வமிக்கவராக இருக்கிறார்.

Maamannan first look posters

இவர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு மாமன்னன் படத்தை இயக்கி நல்ல விமர்சனத்தை பெற்று வசூலும் ஓரளவுக்கு ஈட்டியது. இப்படத்தில் வடிவேலு மாமன்னனாக நடித்திருந்தார். அவரது நடிப்பும் அந்த கதாபாத்திரமும் மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்நிலையில் தற்ப்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது மாமன்னன் படத்தில் வடிவேலு ரோலில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சார்லி தானாம். ஆனால், மாரிசெல்வராஜ் வடிவேலுவிடமும் ஒரு முறை கேட்டு பார்க்கலாம் என்று அவர் நடித்தால் இன்னும் மக்கள் கவனத்தை அதிகம் ஈர்க்கும் என நினைத்து அவரிடம் கேட்க வடிவேலு கதை கேட்டதும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். பின்னர் சார்லியை தூக்கிவிட்டு வடிவேலுவை நடிக்க வைத்தாராம் மாரி செல்வராஜ். ஒருவேளை, சார்லி நடித்திருந்தாலும் வடிவேலு லெவலுக்கு இருந்திருக்காது என மக்கள் பரவலாக கருத்து கூறி மாரி செல்வராஜின் சாய்ஸ் சரியானதே என கூறி வருகின்றனர்..வைகைப்புயல் இந்த கதாபாத்திரமாகவே நடித்திருந்தது நல்ல வரவேற்பை பெற்றது..

Related Articles

  • Be the first to comment

Back to top button