கிசு கிசு

50 வருட திரையுலக பயணம்… தாய் பற்றி பிரித்விராஜ் மனம் திறந்த பேச்சு..!!

மலையாள நடிகர் பிரித்விராஜ் தற்போது முன்னணி நடிகராக மட்டுமல்ல, ஒரு வெற்றிகரமான இயக்குனராக, தயாரிப்பாளராக வலம் வருகிறார்.

மறைந்த நடிகர் சுகுமாரன் மற்றும் நடிகை மல்லிகா தம்பதியினரின் இளைய வாரிசு தான் பிரித்விராஜ். இவரது அண்ணன் இந்திரஜித்தும் நடிகராக இருக்கிறார். இந்த நிலையில் பிரித்விராஜின் அம்மா தனது 50வது வருட திரையுலக பயணத்தை நிறைவு செய்துள்ளார். இதற்காக சமீபத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நடிகர் பிரித்விராஜ் பேசும்போது, “எனது தந்தை இறந்த சமயத்தில் நானும் என் அண்ணனும் என் அம்மா என்ன செய்யப் போகிறாரோ என்று தவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இன்று நாங்கள் இந்த இடத்தில் இருக்கிறோம் என்றால் அதுதான் எங்கள் அம்மா தனி ஆளாக நின்று சாதித்தது. சினிமாவில் 50 வருட பயணத்தை தொட்டுள்ளார். இடையில் சில காலம் நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தாலும் இப்போது முழுமூச்சுடன் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல எனது அம்மாவுடன் நடித்தது, ஒரு டைரக்டராக அவரை இயக்கியது, ஒரு தயாரிப்பாளராக அவருடைய படத்தை தயாரித்தது என வேறு எந்த ஒருவருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு மட்டுமே கிடைத்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Related Articles

  • Be the first to comment

Back to top button