தமிழ் சினிமா

அடடா!! முரட்டு சிங்கிள் உடம்புல இவ்ளோ பிரச்சனையா..? விஷால் கல்யாணம் பண்ணாதற்கு இதுதான் காரணமாம்… ஓடி வந்து உதவிய சிம்பு..!!

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார்.

கல்யாணம் செய்யாததற்கு இதுதான் காரணம் என்று நடிகர் விஷால் மனம் திறந்து பேசியுள்ளார்.சினிமாவிற்குள் நுழைந்த நடிகர்கள் முக்கால்வாசி கேரியரில் ஜெயிக்கிறார்களோ இல்லையோ, கல்யாண வாழ்க்கையில் தோற்று விடக்கூடாது என்பதற்காக காரியத்தில் கண்ணாக இருந்து கல்யாணத்தை முடித்து விடுவார்கள்.

ஆனால் நடிகர் விஷாலோ, ஆரம்பத்தில் வெற்றி படங்களை கொடுத்து வந்தவர். தற்போது நடிகர் சங்க பொறுப்பில் இருந்தும் கல்யாணம் ஆகாமல் 46 வயதிலும் சிங்கிளாவே சுற்றி வருகிறார்.

இதற்கு விஷால் சொன்ன காரணங்கள் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் என்னுடைய திருமணம் நடக்கும் என்று சில வருடங்களுக்கு முன்பு

சபதம் போட்டார். ஆனால் நடிகர் சங்கமும் கட்டுன பாடாக இல்லை, கல்யாணத்தையும் பண்ணுவதாக தெரியவில்லை. ஆனால் தற்போது தான் தெரிகிறது விஷால் ஏன் கல்யாணம் பண்ணாமல் இருக்கிறார் என்று.

அதாவது அவருடைய உடம்பில் அவ்ளோ பிரச்சனைகள் இருக்கிறது. உதாரணத்துக்கு சொல்லனும்னா துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் தாடி பாலாஜி உட்கார முடியல எழுந்திரிக்க முடியல குனிய முடியல சாப்பிட முடியல என்று உடம்பு புல்லா இருக்கும் வியாதியை சொல்லி இருப்பார். அதுபோலத்தான் விஷாலுக்கும்முதுகு வலி இருப்பதால் ரொம்ப நேரம் நிற்க முடியாதாம். எந்த ஒரு கனத்த பொருளையும் தூக்க முடியாதாம்.

அடிக்கடி ஒற்றைத் தலைவலி, கண் எரிச்சல், மண்டக்கனம் போன்ற ஏகப்பட்ட பிரச்சனைகள் உடம்பு முழுவதும் இருப்பதினால் இதை வைத்துக்கொண்டு திருமணத்தை பண்ண முடியாது என்பதினால் தான் கல்யாண வாழ்க்கையில் கமிட் ஆகாமல் சுற்றி வருகிறார். ஆனாலும் இதையே யோசித்துக் கொண்டு இன்னும் கல்யாணத்தை தள்ளிப் போட முடியாது என்பதால் இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்கு சிம்புவிடம் உதவி நாடி இருக்கிறார்.

அதாவது ஏற்கனவே சிம்பு அவருடைய உடல் ரீதியான பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக ஆயுர்வேதிக் மருந்துகளை எடுத்து இருக்கிறார். அதனால் தற்போது முழுமையாக குணமானதால் இவரிடம் ஒரு ஐடியா கேட்டிருக்கிறார். அதாவது விஷாலும் ஆயுர்வேத ட்ரீட்மென்ட் மூலம் சரி செய்யலாம் என்று முடிவு பண்ணி விட்டார். இதற்காக விஷால் ஒரு மாதம் வரை கேரளாவில் ஆயுர்வேத ட்ரீட்மெண்டுக்கு போகப் போகிறார்.

சிம்பு போன அதே இடத்திற்கு விஷாலும் ட்ரீட்மென்ட் செய்துவிட்டு முழுமையாக எல்லா பிரச்சனைகளையும் தீர்த்த பின்பு அவருடைய கல்யாணத்தைப் பற்றி யோசிக்க போகிறார். உடம்புல இவ்வளவு பிரச்சினையை வைத்துக்கொண்டு வெளியில் முரட்டு சிங்கிளாக சுற்றி எல்லாரிடமும் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார் நடிகர் விஷால். எது எப்படியோ உடம்ப பாத்துக்கோங்க என நண்பர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்…

Related Articles

  • Be the first to comment

Back to top button