தமிழ் சினிமா

இணையத்தை கலக்கும் வணங்கான் டீசர்..‌. சூர்யாவிற்கு பதில் இந்த நடிகரா..? வீடியோ வைரல்..!!

வணங்கான் படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது...

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். முதலில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் அவர் வெளியேறியதால் அவருக்கு பதில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இயக்குநர்கள் மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் வணங்கான்.

படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சூர்யாவிற்கும் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து மொத்தமாக வெளியேறினார் சூர்யா.

இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடித்து வருகிறார். சூர்யா மிஸ் பண்ண படம் என்பதால் படத்தில் மீதான எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இணையத்தை கலக்கி வருகிறது…

Related Articles

  • Be the first to comment

Back to top button