கிசு கிசு

ரெண்டு மணி நேரமா… அப்போ 13 லட்சம் கொடுங்க…. கறாராக கேட்ட மீனா… உண்மையை போட்டு உடைத்த பயில்வான்..!!

கதாநாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதன் மீனாவை பற்றி தனது யூடியூபில் கூறிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மீனா. இவர் ஜோடி போடாத ஹீரோக்களை இல்லை என்று சொல்லலாம்.

இதைத்தொடர்ந்து இப்போதும் படங்களில் நடித்து வந்த மீனா, தன்னுடைய மகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்திவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் மீனாவின் கணவர் சாகர் உயிரிழந்த நிலையில் வெளியில் வராமல் மனவேதனையில் இருந்தார். அதன் பிறகு திரைத் துறையினரால் அவருக்கு மீனா 50 என்ற விழா கொண்டாடப்பட்டது.

இப்போது சினிமா வாய்ப்பு மீனாவுக்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு 13 லட்சம் மீனா பேரம் பேசியுள்ளதாக பயில்வான் கூறி இருக்கிறார். அதாவது பத்திரிக்கையாளராக பயில்வான் வேலை செய்யும் போது பல சினிமா பிரபலங்களை பேட்டி எடுக்க செல்வார்களாம்.

அப்போது அவர்களிடம் எந்த ஸ்டூடியோவில் இருக்கிறீர்கள், எங்கு வரவேண்டும் என்று தான் கேட்போம். இப்போது பிரபலங்களை பேட்டி எடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது. சமீபத்தில் மீனாவை யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி எடுத்துள்ளனர்.

மேலும் இந்த பேட்டிக்காக இரண்டு மணி நேரத்திற்கு 13 லட்சம் மீனா கேட்டிருக்கிறார். அவர்களும் தங்களது யூடியூப் சேனல் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக மீனா கேட்ட தொகையை கொடுத்து பேட்டி எடுத்திருப்பதாக பயில்வான் கூறியிருக்கிறார். ஒரு பேட்டிக்கு இவ்வளவு தொகையா என்று ஆச்சிரியத்துடன் சென்றனர். இது என்னடா புது ரூட்டா இருக்கே என நெட்டிசன்கள் முணுமுணுத்து செல்கின்றனர்..

Related Articles

  • Be the first to comment

Back to top button