தமிழ் சினிமா

நடிகர் தாமஸ் நடித்த தமிழ் குறும்படம் “இரவு தமிழ்” விருது வாங்கியது.!!

மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் பில்ம் எஜுகேஷன் அண்ட் வெல்பர் பவுண்டேஷன் அவுரங்காபாத் என்கிற அமைப்பு சார்பில் சர்வதேச தேசிய அளவிலான சிறந்த திரைப்படங்கள மற்றும் குறும்படங்களுக்கான ரீல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் வெஸ்டிவெல் மற்றும் ஏசியன் டேலண்ட் பில்ம் பெஸ்டிவல் 4ம் ஆண்டு விருது வழங்கும் நிகழ்வு மஹாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜிநகர் பகுதியில் உள்ள மவுலானா ஆசாத் ரிசெர்ச் சென்டர் கூட்டரங்கத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் குறும்படங்கள் கலந்து கொண்டன திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களை விருதுக்கு தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர்களாக மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் எழுத்தாளார்களான ஷங்கதீப் சக்கரபர்த்தி, அனில் குமார் சால்வே, தீரிதீப் கக்கோத்தி, துஷார் துரோட் ஜக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசிக்கும் இயக்குனர் முகமது முகமது அமெரிக்கா நாட்டை சேர்ந்த இயக்குனர் எழுத்தாளர் தயாரிப்பாளர்களான ஸ்காட் விகர்ஸ், ஜேசன் ஆண்டர்சன், ஸ்டேட் ஆண் சாப்பல் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லூயிஸ் ரேமண்ட் டெய்லர் இத்தாலி நாட்டை சேர்ந்த குளுசூப்பி ஆர்ச்சாரியா நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஜேம்ஸ் காலின்ஸ் உள்ளிட்டோர் இடம்பெற்று விருதுக்கு திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களை தேர்வு செய்தனர்.
இவ்விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல மராத்தி மற்றும் ஹிந்தி வெப்சீரிஸ் இயக்குனர் விவேக் திவாரி சாம்பிஜிநகரின் மண்டல தலைவர் தீலிப் நிக்கம் மராத்தி மற்றும் ஷாந்தி திரைப்பட நடிகர் சஞ்ஜய் பன்சோடு மராத்தி மற்றும் ஹிந்தி பட எழுத்தாளர் இயக்குனர் ஷமீர் கான் எம். ஏ. மியூசிக் அகாதமியின் நிர்வாகி பேராசிரியர்.சீமா மேடம் சுவரஞ்சலி சங்கீத்சங்கீத்தின் இயக்குனர் ராஷா கான் இசையமைப்பாளர் பாடகர் தமாபால் இவாரலி எழுத்தாளர் திரைப்பட இயக்குனர் அஸ்லம் சர் எழுத்தாளர் இயக்குனர் தயாரிப்பாளர் ரகுநாத் சால்வே அமெரிக்கா நாட்டை சேர்ந்த இயக்குனர் எழுத்தாளர் தயாரிப்பாளர் டிரேஸி ஆன் சாப்பள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். இவ்விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினைப் V3 தமிழ் திரைப்படம் பெற்றது விருதினை இப்படத்தின் இயக்குனர் P. அமுதவானன் அவர்கள் பெற்று கொண்டார் . சர்வதேச அளவில் சிறந்த 5 திரைப்பத்திற்காகன விருதினை XYZ தமிழ் திரைப்படம் பெற்றது இவ்விருதினை படத்தின் இயக்குனர் Y. சோமன் அவர்கள் பெற்று கொண்டார் குறும்படம் மற்றும் பைலட் பில்ம்க்கான பெஸ்ட் நெகட்டிவ் ரோல் ஆக்டர் விருது தேர்வு பட்டியலில் அமெரிக்க நாட்டை சேர்ந்த நடிகர் டிவானா லீ நடித்த இவில் மதாமி இன் படம் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த நடிகர் எலிவரா வரைஸ் நடித்த லவ்பைட்ஸ் அமெரிக்க நாட்டை சேர்ந்த நடிகர் டென்னிஸ் மேலன் நடித்துள்ள கிரே பிபல் படமும் தமிழ் நாட்டை சேர்ந்த நடிகர் ஆர். ஏ. தாமஸ் நடித்துள்ள இரவு படமும் இடம்பெற இருந்தன. இதில்
V.P.Productions தயாரிப்பில் வேப்பனப்பள்ளி நாகராஜ் அவர்கள் இயக்கத்தில் இரண்டு விதமான கெட்டப்பில் நடிகர் ஆர். ஏ. தாமஸ் அவர்கள் நடிந்திருந்த இரவு தமிழ் குறும்படம் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டது .இவ்விருதினை இரவு படத்தின் நடிகரும் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் அவர்கள் பெற்று கொண்டார் தேசிய அளவில் சிறந்த குறும்படம் சிறந்த ஒளிப்பதிவு சிறந்த இயக்குனருக்கான விருதினை தமிழ் குறும்பபடமானமை பர்ஸ்ட் பீரியட் குறும்படம் பெற்றது இவ்விருதினை படத்தின் இயக்குனர் கண்ணன் பெற்று கொண்டார் சிறந்த பிற மொழி குறும்படத்திர்காண விருது தமிழ் குறும்படமான கனவு மெய்பட வேண்டும் என்கிற படத்திற்கு வழங்கப்பட்டது . இவ்விருதினை படத்தின் இயக்குனர் சாயூ பரஞ்சோதி அவர்கள் பெற்று கொண்டார். இப்போட்டியில் இந்தியா மராத்தி தமிழ் மலையாளம் தெலுங்கு ஆங்கிலம் ஒரியா வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் எடுக்கப்பட்ட படங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் மஹாராஷ்டிரா மாநில திரை கலைஞர்களின் நடனம் பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது..

Related Articles

  • Be the first to comment

Back to top button