வீடியோ

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட் ஜோடியின் கியூட் போட்டோஸ்… சமூக வலைதளங்களில் வைரல்..!!

ஜாம்நகரில் முதன்முறையாக ஜோடியாக வந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட்டின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது..

மும்பை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயத்தார்த்த விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிச்சயத்தார்த்த மோதிரத்தை அம்பானி வீட்டில் உள்ள செல்ல பிராணியான நாய் கொண்டு வந்து கொடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி வந்த நிலையில் தற்போது ஜாம்நகரில் ஜோடியாக வலம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட்டின் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…

Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆனந்த் அம்பானி பேசப்பட்டு வருகிறார். 3000 ஏக்கர் பரப்பளவில் அவர் நடத்தி வரும் வந்தாரா எனப்படும் விலங்குகளுக்கான மறு வாழ்வு மையம் இந்தியாவை தாண்டி கவனத்தை பெற்றுள்ளது.

  • Be the first to comment

Back to top button