பாலிவுட்

மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் பிரம்மாண்ட பாராட்டு விழா..!!

தெலுங்கு திரையுலகில் ‘மெகாஸ்டார்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி. கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் தனது வெற்றி பயணத்தை தொடர்ந்து வருகிறார்..

சில காலம் அரசியலிலும் இருந்து விட்டு மீண்டும் சினிமாவுக்கே திரும்பி வந்தார். இந்த நிலையில் திரையுலகுக்கு அவர் ஆற்றிய கலைச் சேவைக்காகவும் அவர் செய்துள்ள சாதனைகளுக்காகவும் அவருக்கு நமது நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இதற்காக சிரஞ்சீவியை கவுரவிக்கும் விதமாக பிரம்மாண்ட விழா ஒன்றை அமெரிக்காவில் உள்ள சிரஞ்சீவியின் ரசிகர்கள் நடத்தியுள்ளனர். அமெரிக்காவில் கலிபோர்னியாவில் டானா பாயிண்ட்டில் உள்ள ரிட்ஸ் கேரிட்டானில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான சிரஞ்சீவி ரசிகர்கள் கலந்து கொண்டனர். சிரஞ்சீவியின் ரசிகரும் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த தொழிலதிபர் இம்தியாஸ் ஷெரீப் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

விழாவில் ஆயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிரஞ்சீவி மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வின் போது பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது..

Related Articles

  • Be the first to comment

Back to top button