தமிழ் சினிமா

 பாலாவின் 1 படத்தில் நடிப்பது 100 படங்களில் நடிப்பதற்கு சமம்.. ரஜினி டயலாக்-உடன் சொன்ன அருண் விஜய்..!!

சென்னை: இயக்குனர் பாலா -நடிகர் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ளது வணங்கான் படம். இந்த படத்தின் போஸ்டர் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான விமர்சனங்களை பெற்றுள்ளது.

பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து அவர் விலகினார். ஆனாலும் திட்டமிட்டபடி  வணங்கான்’  படம் வெளியாகும் என்றார் பாலா. அவர் சொன்னது போல அருண் விஜய் வைத்து படம் எடுத்தார். அருண் விஜய் அப்படத்தில் நடித்தது பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் 

படத்தில் அருண் விஜய் ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். முன்னதாக இந்த படத்தில் சூர்யா நடிக்க கமிட் ஆகி முதல் கட்ட படப்பிடிப்பும் நடந்து முடிந்த நிலையில் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகினார். இந்த படத்தை அவர் தயாரிக்கவும் இருந்த நிலையில் படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் பாலா தன்னுடைய பி ஸ்டூடியோஸ் சார்பில் வணங்கான் படத்தை அருண் விஜய் லீட் கேரக்டரில் நடிக்க தயாரித்து வருகிறார்.

விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். தன்னுடைய படங்களின் கதைக்களத்தை மிகச் சிறப்பாக தேர்வு செய்து வரும் அருண் விஜய் முதல் முறையாக பாலா இயக்கத்தில் வணங்கான் படம் மூலம் இணைந்துள்ளார். இதையொட்டி இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. படம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக வித்தியாசமான வகையில் வெளியான படத்தின் போஸ்டர் ஏராளமான விமர்சனங்களை பெற்றது. பாராட்டுக்களையும் பெற்றது.

நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின் மிக முக்கியமான கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தை பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கன்னியாகுமரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவியும் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் அம்மாவுமான சாயாதேவி முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.இந்த படத்தில் முதல் முறையாக இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடித்துள்ள அருண் விஜய் படம் குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இயக்குனர் பாலாவின் படத்தில் நடிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அவரது ஒரு படத்தில் நடிப்பது 100 படங்களில் நடிப்பதற்கு சமம் என்றும் கூறியுள்ளார். அந்த அளவிற்கு அவரது படங்களில் நடிப்பதன்மூலம் அனுபவத்தை பெற முடியும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

 சமீபத்தில் அருண் விஜய்யின் அக்கா அனிதா விஜயகுமார் மகள் தியாவின் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், அந்த திருமணத்தில் உற்சாகமான அருண் விஜய்யை பார்க்க முடிந்தது. தாய் மாமனாக மணமகளை கையைப் பிடித்து மணமேடைக்கு அழைத்துவந்த நிகழ்வுகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கொண்டாட செய்தது. இந்த திருமணத்தின் கொண்டாட வீடியோக்களும் வெளியான நிலையில், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தன்னுடைய குடும்பத்தினருடடன் இந்த திருமண விழாவில் அருண் விஜய் பங்கேற்றிருந்தார்.

 இந்நிலையில் தன்னை குறித்தும் தன்னுடைய குடும்பத்தினர் குறித்தும் அவதூறாக பேசிய யூடியூப் சேனல் குறித்து அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தற்போது புகார் செய்துள்ளார். தன்னுடைய அப்பா விஜயகுமார் மற்றும் அம்மா முத்துக்கண்ணு குறித்து வீடியோவுடன் அந்த யூடியூப் சேனல் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் இதனால் தானும் தன்னுடைய குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.மேலும் இது போன்ற தவற தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டு கொண்டார் நடிகர் அருண் விஜய்…

Related Articles

  • Be the first to comment

Back to top button