தமிழ் சினிமா

மும்பை தொழிலதிபரை மணக்கிறார் சரத்குமார் மகள் நடிகை வரலட்சுமி..!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் -தலைவராக இருப்பவர் நடிகர் சரத்குமார். இவரது மகள் நடிகை வரலட்சுமி.

நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமார், விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகமான போடா போடி என்ற படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சண்டைக்கோழி 2, மாரி 2, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்து இளையராஜாவின் 1000வது படமாக வெளியான தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமி கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார்.

இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ்க்கும் மும்பையில் நேற்று முன்தினம் திருமணம் நிச்சய நிகழ்ச்சி நடந்தது. இதில் இரு வீட்டு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர். திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை..

Related Articles

  • Be the first to comment

Back to top button