கிசு கிசுதமிழ் சினிமா

கோடிக்கணக்கில் தங்கம்… பிரபல வாரிசு அரசியல்வாதி வாங்கி தந்தரா… நடிகை நிவேதா பெத்துராஜ் குமுறல்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நிவேதா பெத்துராஜ். இவர் தமிழ், தெலுங்கு, போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.நடிகை நிவேதா பெத்துராஜ் மற்றும் பிரபல அரசியல் வாரிசு இருவரையும் இணைத்து வைத்து பத்திரிகையாளர் ஒருவர் படுமோசமாக பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், திரிஷாவுக்கு பொங்கியவர்கள் நிவேதா பெத்துராஜுக்கு ஏன் பொங்கவில்லை என ரசிகர்களே அந்த பத்திரிகையாளருக்கு எதிராக களத்தில் குதித்தனர்.

ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ். தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி கொண்டவர்.

இது போன்ற நிலையில் நிவேதா பெத்துராஜை பற்றி பிரபல பத்திரிகையில், நிவேதா பெத்துராஜும் சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கிய பிரபல வாரிசு அரசியல்வாதியும் ஒன்றாக நடிக்கும் போது காதலித்ததாகவும், கோடிக்கணக்கில் தங்கம் மற்றும் கார்கள் பரிசாக வழங்கப்பட்டதாகவும் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி பலரும் அந்த பத்திரிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். மேலும் த்ரிஷாவை குறித்து இவ்வாறு அவதூறு பரப்பிய போது பல சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால் நிவேதா பெத்துராஜிற்கு ஏன் யாரும் எதுவும் சொல்லவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனை அடுத்து தற்போது நிவேதா பெத்துராஜ் மௌனத்தை கலைத்துள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிவேதா பெத்துராஜ், “ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், அவர்களின் குடும்பத்தின் நிம்மதியையும், பணத்திற்காக பொய்யான செய்திகளை பரப்பி வாழ்க்கையை அழிக்காதீர்கள். என்னை பற்றி இணையத்தில் பரவும் செய்திகள் அனைத்தும் பொய் இதை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்..

Related Articles

  • Be the first to comment

Back to top button