தமிழ் சினிமா

நடிகர் அஜித்திற்கு மூளையில் அறுவை சிகிச்சை..!!

சென்னை: தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் . தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார்.அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63-வது படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

பிஸியான நடிகராக இருந்தாலும் கூட அஜித்குமார் உடல்நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் ஆவார். இதன் காரணமாக அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதையும் அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல நேற்றும் மருத்துவ பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு அஜித் சென்றிருக்கிறார். பரிசோதனைகள் முடிவில் அவரின் மூளையில் லேசான வீக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது.

வீக்கமானது பயப்படும் அளவிற்கு இல்லை என்றாலும் ஒரு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்வது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்நினையில் தற்போது அப்போலோ மருத்துவமனையில் மருத்துவர் பெரியகருப்பன் தலைமையில் நடிகர் அஜித்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு மூளையில் இருந்த கட்டியானது அகற்றி உள்ளது. தற்போது அஜித் மிகவும் நலமாக உஉள்ளார் என்றும் மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது..

Related Articles

  • Be the first to comment

Back to top button