தமிழ் சினிமா

 நடிகர் அஜித் மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார்..!!

சென்னை:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் அஜித்குமார் தற்போது நலமுடன் வீட்டிற்கு திருப்பி உள்ளார்.  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்குமார் தற்போது நலமுடன் இருக்கிறார்.

நடிகர் அஜித்குமார் கடந்த வியாழக்கிழமை வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டார்.

அப்போது காதுக்கு கீழே உள்ள நரம்பு பகுதியில் வீக்கம் இருப்பதாகவும் அதற்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுரை தெரிவித்திருந்த நிலையில் அரை மணி நேரத்தில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.

மேலும் இரண்டு நாட்கள் மருத்துவர் கண்காணிப்பில் நடிகர் அஜித் இருந்த நிலையில் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக அஜித் தரப்பு தெரிவித்துள்ளது..

Related Articles

  • Be the first to comment

Back to top button