ரமணா பட பணியில்…பணத்திற்காக… சில தனியார் மருத்துவமனைகளில்… நடிகர் சத்யராஜ் மகள் பகீர் தகவல்.!!
நோயாளிகள் வருவாயை உருவாக்கும் இயந்திரங்கள் இல்லை… தயவு செய்து தனியார் மருத்துவமனைகள் மனிதாபிமானத்தோடு நடத்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா கேட்டுக் கொண்டுள்ளார்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இதில் சிபிராஜ் பல்வேறு படங்களில்நடித்து புகழ் பெற்றுள்ளார். மகள் திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். நியூட்ரிஷன் துறையில் M.Phil., பட்டம் பெற்றுள்ள திவ்யா, இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிசனிஸ்ட்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் ஆரோக்கியம் குறித்துத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், ஒரு சில தனியார் மருத்துவமனைகள் குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. அதில், சில தனியார் மருத்துவமனைகள் பணத்திற்காக நோயாளிகளுக்கு தேவையில்லாத ரத்தப் பரிசோதனைகள், ஸ்கேன், எம்.ஆர்.ஐ. என பல டெஸ்;lடுகள் எடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். நோயாளிகள் வருவாய் உருவாக்கும் இயந்திரங்கள் கிடையாது. தனியார் மருத்துவமனை வைத்திருப்பவர்கள் நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
திவ்யா சத்யராஜ் ‘மகிழ்மதி இயக்கம்’ என்ற அமைப்பை 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். அந்த அமைப்பின் மூலம் தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கி வருகிறார். தொடர்ந்து மக்கள் பணிகளில் ஈடுபட்டு வரும் திவ்யா வெளியிட்ட இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
Be the first to comment