தமிழ் சினிமா

அந்த ஃபாரின் சரக்கு தான் வேணும் என அடம்பிடித்த கவிஞன்… கோபத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் தான் இது..!!

கண்ணதாசன் என்றால் அவரின் பாடல் வரிகள்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். கண்ணதாசனின் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில், பள்ளிக்கூடமே போகாத, மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக் கூடிய வலிமை பெற்றது. ஆனால், சிலருக்கோ அவர் நன்றாக மது அருந்துவார் என்பது நினைவுக்கு வரும்.

அதேபோல், அவர் மது அருந்திவிட்டு பல பாடல்களை எழுதி இருக்கிறார் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அதில் உண்மையில்லை.

எனது அப்பா மது அருந்திவிட்டு ஒருநாளும் பாடல்களை எழுதியது இல்லை என கண்ணதாசனின் மகன் அண்ணாதுரையே பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். எல்லோரையும் போல் கண்ணதாசனுக்கு மதுப்பழக்கத்தை கற்றுக்கொடுத்தது நண்பர்கள்தான். ஒருமுறை நண்பர்களுடன் ஒரு விடுதிக்கு சென்றபோது கம்பதாசன் என்பவர்தான் அவருக்கு அறிமுகமானார்.

அப்போது நண்பர்கள் கண்ணதாசனை மது அருந்த சொல்லி இருக்கிறார்கள். அப்போது ‘இதற்கு முன்பு மது அருந்தி இருக்கிறீர்களா?’ என கம்பதாசன் கேட்டபோது ‘இல்லை இதுதான் முதன்முறை’ என கண்ணதாசன் சொல்ல ‘வேண்டாம். ஒருமுறை மதுவை தொட்டால் அது உங்களை விடாது’ என அவர் சொல்லி இருக்கிறார்.

ஆனால் கண்ணதாசனோ ‘இல்லை இன்று ஒரு நாள் மட்டுமே’ என சொல்லி இருக்கிறார். ஆனால், அப்படி அவர் ஆரம்பித்த அந்த பழக்கம் வாழ்வின் இறுதி வரை அவரை விடவில்லை. அதேநேரம், குடிப்பவர்கள் எல்லாம் கண்ணதாசனும் ஆகிவிடமுடியாது. ‘கண்ணதாசன் போல் தண்ணி அடித்தால் கவிதை வருமா கழுதைக்கு’ என ஒரு படத்தில் எழுதி இருப்பார் வைரமுத்து.

பாடல்களை எழுத போகும்போது மூடு மாறிவிட்டால் மது அருந்துவது கண்ணதாசனின் பழக்கம். அதற்கான செலவை தயாரிப்பாளரே ஏற்றுகொள்வார். ஏனெனில் அவர்களுக்கு எப்படியாவது கண்ணதாசனிடமிருந்து பாடல் வேண்டும். ஒருமுறை ஒரு படத்திற்காக பாடல் எழுதப்போனார் கண்ணதாசன்.

அப்போது அங்கிருந்த சிலர் ஒரு வெளிநாட்டு மதுபானத்தின் பெயரை சொல்லி அவரின் ஆசையை தூண்டிவிட்டனர். உடனே. இனிமேல் பாடல் வராது. எனக்கு அந்த மது பாட்டில் வேண்டும் என கண்ணதாசன் அடம்பிடிக்க துவங்கிவிட்டார். ஆனால், அது விலை அதிகம் என்பதால் அதற்கான பணத்தை கொடுக்க தயாரிப்பாளர் மறுத்துவிட்டார்.

எனவே, தனது அண்ணன் சீனிவாசனிடம் ஒரு ஆளை அனுப்பி பணம் வாங்கி வர சொன்னார் கண்ணதாசன். ஆனால், அவரும் பணம் தரவில்லை. அப்போது கோபத்தில் அவர் எழுதியதுதான் ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே.. ஆசை கொள்வதில் அர்த்தம் ஏதடா காசில்லாதவன் குடும்பத்திலே’ என்கிற பாடல் ஆகும்.. அந்த பாடல் பயங்கர ஹிட் ஆனது. இன்னும் கண்ணதாசனின் எவ்வளவோ பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது…

Related Articles

  • Be the first to comment

Back to top button